எண்ணெய் வடியும் முகமா?

downloadss22

சிலருக்கு என்னதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணைய்ப்பசை மாறாது அப்படியே இருக்கும்.  இந்த எண்ணை சருமம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  எவ்வளவு தான் வயதானாலும் தோல் அப்படியே ஸ்ரீதேவி போல் இருக்கும்.

எனினும்  எண்ணைய் சருமம் பிடிக்காதவர்களும் பலர் இருக்கிறார்கள். மேலும், பவுடர் மற்றும் கிரீம்கள் தடவும் போதும் இந்த சருமம் ஒத்துழைக்காது. இவர்களுக்கு ஒரு அருமையா டிப்ஸ், இதோ!

எண்ணெய் சருமம் உடையவர்கள், கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் சற்று மாறும்.

மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கிரீம்கள் மற்றும் சோப்புகள்(எண்ணைய் வடியும் சோப்புகள்) போன்றவற்றை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published.