கார்மேக கூந்தல் வேண்டுமா- முடி பிரச்சினைகளுக்கு தீர்வு

natural-hair-growth (1)

மனித குலத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒரு வடிவமைப்புதான் ஒரே எலும்புக்கூடுதான் ஆனால் மேல் தோல் பராமரிப்பை பொறுத்து அவரவர் தோற்றம் மாறுபடும் சிலர் சிகப்பாகவும் சிலர் மாநிறமாகவும், சிலர் கருப்பாகவும் இருப்பார்கள்.  இது அவர்கள் வாழும் சூழலைப் பொறுத்தது.  நம்மவர்களில் கருப்பு என்று சொல்லப்படுபவர்கள் ஆப்பிரிக்காவில் பிறந்தால் சிகப்பானவர்கள் என்று சொல்வார்கள் அவர்கள் அதைவிட  கருப்பாக இருப்பார்கள்.  வாழும் சூழல் தட்பவெப்பத்திற்கு ஏற்ப அவர்களது மேல் தோல் இருக்கும்.  ஆப்பிரிக்காவில் வாழும் மனிதர்கள் வலிமையாகவும் இயற்கையிலேயே பலசாலிகளாகவும் இருப்பர்.  நம்மவர்கள் நடுத்தரமாக இருப்பார்கள். பாருங்கள் சீனர் மற்றும் ஜப்பானியர்களை குள்ளமாகவும் சராசரியான உயரத்துடன் தான் இருப்பார்கள்.

இதனால் அழகு என்பது அவர்களது ஜீன்களைப் பொறுத்து.  தனக்கென்ற உள்ளதை பராமரித்தலே அது அழகு தான். முடி ஒரு மனிதனுக்கு மிக முக்கியம் கருப்போ சிவப்போ பார்த்தவுடன் கண்களில் தெரிவது கூந்தல் தான்.  கூந்தலைப் பராமரித்தல் மிக முக்கியமானது. நம் உடலில் வெளியேற்றப்படும் கழிவுகள் தான் நகங்கள் மற்றும் முடிகள். இவற்றை பேணிக்காக்க வேண்டும்.

அதற்கான சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடிகளுக்கு என்றும் எண்ணெய் வைக்காமல் இருக்காதீர்கள்.  எண்ணெய் வைத்துக் கொண்டு வெளியே செல்ல விருப்பப்படாதவர்கள் இரவு நேரங்களில் எண்ணெய் வைத்துக்கொண்டு அடுத்த நாள் தலைக் குளித்துவிட்டு செல்லவும்.  ஆனால் எண்ணை மிக முக்கியமானது.

கடைகளில் விற்கப்படும் மெடிசன் மற்றும் ஹேர் ஆயில்களை நாமே சென்று செக்கில் வாங்கி வரும் தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்தது.

எண்ணை தலை முடிக்கு தேவையில்லை.  எப்படி தண்ணீரை வேர்களுக்கு ஊற்றுகின்றோம் அது போல் எண்ணையை தலை முடிக்கு வைக்காமல் அதன் வேர்ப்பகுதிகளில் விரல்களால் தடவ வேண்டும் தலை முடி செழித்து வளரும்.

வாரம் ஒருமுறை கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் முழுக்க வெப்பம் உடலில் உண்டாகும் இந்த வெப்பம் மண்டையோட்டுக்கு தான் எப்போதும் வரும். அவ்வாறு வருகையில் முடியின் கால்பகுதி பாதிக்கப்பட்டு இலேசாகி உதிர்ந்துவிடும்.  ஆக உடல் உஷ்ணமும் தலை முடியை பாதிக்கும்.

ஷாம்பூ மற்றும் ஹேர் ஆயில் போன்ற செயற்கையான முடி அலசும் பொருட்களை தவிர்த்துவிடுங்கள்.  உண்மையில் இவைகளால் முடியில் எந்த வொரு முன்னேற்றமும் வரப்போவதில்லை.  ஏற்கனவே உள்ள சுருட்டை மற்றும் காட்டுப்புதர்போல் உள்ள முடிகளை இலேசாக்கி காற்றில் பறக்குமாறு செய்வதுதான் இதன் வேலை.

சீக்காய் அல்லது செம்பருத்தி இலை, பூ, எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழையை தலையில் தேய்த்து (நன்றாக வேர்பட) குளிக்கவும்.

தினமும் முடி உதிரும் பின் வளரும் அதற்குப் பயப்பட வேண்டாம்.  தேவையான அளவு முடி வளர சக்தி இருந்தாலே போதும் இரும்புச் சத்து முடி வளர முக்கியமானது.  தினமும் ஒரு பேரிச்சை பழம் அல்லது தேன் சாப்பிடுதல் இரும்புச் சத்தை தரும்.  முருங்கை கீரையை தினமும் சாப்பிட்டு வர இரும்புச்சத்து அதிகரிக்கும்.  கீரையை வடிகட்டும் தண்ணீரையும் வீணாக்கமால் இரசம் வைத்து விடவும்.

கூந்தலில் பேன், அரிப்பு, பொடுகு இருந்தால்  அதற்கு ஒரே தீர்வு வேம்பு தான்.  வேப்ப இலைகளை முதல் நாள் இரவு தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் காலையில் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து ஒரு வாரம் முழுக்க குளிக்கவும் கூந்தலில் பூச்சிகள் மற்றும் வெட்டுப்புழுக்களால் ஏற்படும் பாதிப்பு அறவே இருக்காது.

கூந்தல் தடிமனாக வளர சுத்தமான செக்கில் கண்பார்த்து வாங்கி தே.எண்ணை, விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் இவை மூன்றையும் சரிசமமாக கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும் தினமும் தவறாமல் தேய்த்துவரவும்.

நரைமுடி வந்தால் (இளமையில்) கறிவேப்பிலையை அரைத்து தண்ணிர்கலந்து பற்றுப்போடுங்கள்.  உண்பதில் அதிகமாக கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக்கொள்ளுவதாலும் அரைத்து வழுக்கையில் தேய்ப்பதால் முடிவளரும்.

எக்காரணம் கொண்டும் வேதிப்பொருட்களால் ஆன ஆயிலையோ பேஸ்டையோ தலையில் தடவவேண்டாம்.

 

Leave a Reply

Your email address will not be published.