கையில் அணியும் டேபிளட் வாட்சுகள் வந்தாச்சு

downloddad

ஆப்பிள், சோனி, சாம்சங் என்று பல தொழில் நுட்ப நிறுவனங்கள் மொபைல் வாட்சுகளை அறிமுகப்படுத்தி சோர்ந்து போனது.  ஏனென்றால் இத்தகைய வாட்சுகள் ஏதாவது ஒரு தகராறு கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றது.  பெரிய பேட்டரிகளை கொண்ட ஸ்மார்ட் போன்களே ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்க மாட்டேங்கிறது.  இதில் எப்படி ஒரு சிறிய ஸ்மார்ட் வாட்ச் நிற்கும்.

images (91)

மேலும் பல பிரச்சினைகளால் ஸ்மார்ட் வாட்சுகள் இருந்தும் இல்லாமல் இருக்கின்றது.  இந்த குறைய போக்க RUFUS LABS நிறுவனத்தார் தைரியமாக 3” அளவு ஸ்கிரீன் கொடுத்து வாட்சின் வாரை அதற்கு பிட் பண்ணி.  ஒரு சிறிய மொபைலை ஸ்மார்ட் வாட்ச்சாக மாற்றி விட்டார்கள்.

இது போதாது என்று ஸ்மார்ட் வாட்சுகளில் மொபைலில் உள்ள அனைத்து அம்சங்களான வைபை, மியுசிக், மெசெஜிங், போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.  மற்ற நிறுவனங்கள் இதையோசித்து கைவிட்டிருக்கும்.  ஏனென்றால் பெரிய திரையுள்ள வாட்சை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருப்பார்கள் போல.

Rufu Lab நிறுவனத்தின் இந்த படைப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.  இதில் ஆன்ட் ராய்டு இயங்கு தளம் தற்போது கொடுத்துள்ளார்கள்.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் லாபமடைவது தெரிந்தால் மற்ற இயங்கு தளத்தையும் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.  தண்ணீரில் நனையாமல் இருக்க Water proof  தன்மையும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட் வாட்சுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published.