கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

black cumin

 

கருஞ்சீரகம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

” கருஞ்சீரகத்தில் மரணத்தைக் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர். அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள். புகாரி, 5688, முஸ்லிம், 1451. திர்மிதீ, இப்னுமாஜா)

பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கபம், குளிர்காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு கருஞ்சீரகம் நல்ல பயனைத் தரும்

ஜலதோஷம்..   கருஞ்சிரகத்தை வறுத்து தூளாக்கி எண்ணெய்யில் ஊற வைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். கருஞ்சீரகம் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.

சிறுநீர் அடைப்பு மற்றும் மாதவிடாய் கோளாறுகள்

கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.  மாதவிடாய் போக்கையும் சீராக்கும்.

மஞ்சள் காமாலை

தாய்ப்பாலில் ஏழு கருஞ்சீரக வித்துக்களை ஊற வைத்து பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

சுவாசக் கோளாறு

5 கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.

தலைவலி

கருஞ்சீரகத்தை அரைத்து பத்துப்போட்டால் தலைவலிக்கு நல்லது.

பல்வலி

கருஞ்சீரகத்தை (Veneger)ல் வேக வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

செரிமான கோளாறு

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச்சிறப்பாகும்.

தலைமுடி

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

பக்கவாதம்

கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

இதர நோய்கள்

நாய்க்கடி, பிரசவ இரத்தப்போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published.