கேஸ் சிலிண்டருக்கும் உண்டு Expiry Date.

137761-14852-lpg-cylinder-expiry-date

நம் எல்லோருடைய வீட்டிலும் இப்போது சிலிண்டர் வந்து விட்டது.  எல்லோரும் சிலிண்டரை பயன்படுத்துகின்றார்களோ இல்லையோ ஆனால் வாங்கிய உடன் அதை ஹோட்டலுக்கோ அல்லது அடுத்தவர்களுக்கோ டபுள் தொகையோடு விற்று விட்டு காலியை பெற்றுக்கொண்டு நிம்மதியாகின்றனர்.

ஆனால் இந்தப் பதிப்பு புதியது இதை படியுங்கள் ஆபத்தை உணருங்கள்.  இரும்பு ஒரு உலோகம் எவ்வளவு தான் கடினமான உலோகமாக இருந்தாலும் கந்தக திரவத்தை (சல்பியூரிக் ஆசிட்) ஊற்றினால் அரித்துவிடும். அதைப்போல் நமது LPG (அதாங்க நாம் பயன்படுத்தும் கேஸ்) அந்த வாயுவிலும் இரும்பை அரிக்கக் கூடிய சக்தியுள்ளது.

இதை அறிந்து தான் சிலிண்டர் தயாரித்து அதை சில காலங்கள் பயன்படுத்திவிட்டு மீண்டும் அதை உருக்கி மீண்டும் பயன்படுத்துவர்.  இது சிலிண்டர் காலாவதியாகும் நேரம் ஆகும்.   ஆனால் நம்மவர்கள் பயன்படுத்தும் சிலிண்டர்கள் பெரும்பாலும் Expiry Date ஆனதாக இருக்கும் அல்லது Expiry யை நெருங்கி கொண்டே இருக்கும்.

அப்படி கவனிக்காமல் இருந்தால் சிலிண்டர் தீடீரென்று உடைந்து போகும் அபாயம் உண்டு கேஸ் வெளிவந்தால் பெரும் அபாயம் ஏற்பட்டுவிடும்.   இந்த கேஸ் சிலிண்டரின் காலாவதி நேரம் உள் பகுதியில் குறிக்கப்பட்டிருக்கும்.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A – மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B – ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C – செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D – டிசம்பர் – நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு D-13 என்றால் அதன் காலாவதி நேரம் டிசம்பர் 2013 ஆகும்.  இனிமேல் விழித்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.