வாட்டர் பாட்டில்! கேன்சர் அபாயம்

images (90)

இப்போது எல்லாருடைய வீட்டிலும் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டிப்பாக வந்து விட்டது அதை தவிர்க்க முடியாது. மேலும் நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இருக்கும் என்று நம்பி நம் பிரயாணத்தின் போது காசு கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி விடுகின்றோம்.

fig954_3

பாட்டிலில் உள்ள குறியீடுகளும் அதன் பண்புகளும்

வாங்கியப்பின் குடித்துவிட்டு அந்த பாட்டிலை தூக்கி எறிந்து விடவேண்டும் அல்லது குப்பை தொட்டியில் ரீ சைக்கிளுக்காக போடவேண்டும் என்று இருங்கள்.  அதைவிட்டு விட்டு அந்த பாட்டில் மீது ஆவல் கொண்டு அதை எடுத்துக்கொண்டு பாட்டிலில் பால் தண்ணீர் மற்றும் எண்ணை முதலிய பொருட்களை நிரப்பி மீண்டும் பயன்படுத்துகின்றோம்.

மேலும் குழந்தைகளுக்கு இந்த பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அவர்களுக்கு கொடுத்து அனுப்புகின்றோம். ஒரு நல்ல தண்ணீர் வாட்டர் பாட்டிலின் விலை 50 அல்லது 60 ரூபாய் இருக்கும்.  ஆனால் ஒரு வாட்டர் பாட்டில் விலை வெறும் 10 ரூபாய் தான்.  இரண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க இன்னும் தெரியலியா.  10 ரூபாய்க்கு வாட்டர் பாட்டில் வாங்கி அதை குடித்துவிட்டு தூக்கி எறியும் அளவுக்கு தான் அதன் தரம் இருக்கும்.  ஆனால் எப்போதும் பயன்படுத்த வாங்கப்படும் வாட்டர் பாட்டில் அப்படியில்லை அதன் தரம் அதிகமாக இருக்கும்.

வாட்டர் பாட்டில் வாங்கும் போது அதன் அடிப்பாகத்தில் 1, 2, 3 என்று ஏதாவது எண்கள் இருக்கும் இதன் அர்த்தம் அதன் தரத்தை குறிக்கும். இதில் 1 என்பது திரும்ப பயன்படுத்தவே கூடாது.  ஆனால் நம்மவர்கள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றது.

எவ்வளவோ பணம் கொட்டி நல்ல பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்கின்றோம் வாட்டர் கேனுக்கு கஞ்சம் வேண்டாம் 50 ரூபாய் கொடுத்து நல்ல வாட்டர் கேன் கடையில் வாங்கி கொடுங்கள்.

குழந்தைகள் தொடர்ந்து இதைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு புற்றுநோய் வந்து விடும்.  ஜாக்கிரதை இனிமேல் வாட்டர் பாட்டில் அல்லது கூல்டிரிங் பாட்டில் வாங்கினோமா குடித்தோமா தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டோமா என்று இருக்கவேண்டும். சரியா….

 

 

Leave a Reply

Your email address will not be published.