தேனீர் அருந்தும் பழக்கம் நல்லது.

tea

ஏறக்குறைய 40,000 மனிதர்களை 13 ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் பத்திரிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.  டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறுதடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நன்மை ஓரளவிற்கு இருக்கிறது.  ஆனால் டீ குடிப்பவர்களுக்கு அதிக நன்மை இருக்கிறது.  ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனைவிட குறைவான டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவிகிதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

ஆனால் குடிக்கும் டீயிள் அளவை அதிகரித்துக் கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைகிறது என்றில்லை.  ஒரு கட்டத்தில் இந்த பலன் நின்று போய்விடுகிறது.  நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும் பொழுது அதில் சில துளிதான் பால் விடுவார்கள்.  ஆனால் இந்தியர்கள், இலங்கையர்கள் எல்லாம் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ சாப்பிடுவார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.  அந்த அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும் பொழுது இப்படிப்பட்ட மருத்துவ பலன்கள் கிடைக்குமோ என்பது தெரியவில்லை.  டீயில் இருக்கும் ப்லவனாய்ட்ஸ் என்ற வஸ்துதான் இருதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று சொல்லப்படுகிறது.  டீயில் பால் சேர்க்கும் போது பலன் கிடைக்காமல் போய் விடுகிறதா என்பதை இனிமேல் தான் ஆராய்ச்சிகள் உறுதி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.