மன உளைச்சலை தவிர்க்க

images (87)

 

என்றோ யாருக்கோ நாம் செய்த தவறினை நினைத்தோ அல்லது வேறு யாரோ நமக்கு செய்த தவறினை நினைத்தால் உடனே மன உளைச்சல் ஆரம்பித்துவிடும்.  அல்லது தாம் செய்த தவறினை நினைத்து நினைத்து மன உளைச்சல்அடைந்துகொண்டிருப்பார்கள்.

சில சமயம் மன உளைச்சலை எற்படுத்தும் நிகழ்ச்சிகள் சம்பவிக்கும் போது அவசர சிகிச்சை அவர்களுக்கு தேவைப்படுகின்றது.  உடலில் ஏற்படும் சில வேதியல் மாற்றங்கள் உடலில் ஏற்படும் போது மன அழுத்தம் உண்டாகின்றது. பின்வரும் காரணங்களால் தான் மன உளைச்சல் ஏற்படுகின்றது.

தன் நிலை இழத்தல்.

உணர்ச்சிப் பெறுக்கு.

தன்னைத் தானே குறை கூறுதல்.

நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப்பற்றி நினைத்து அதிக கவலையுறுதல்.

அச்சம், கோபம், சோர்வு மற்றும் கவலைகள் அதிகமாய் ஏற்படும் போது.

வேண்டத்தகாத ஒரு விஷயம் நடக்கும்போது, சில விநாடிகளிலேயே சங்கிலித் தொடராக மன அழுத்தத்தின் விளைவாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளையில் முக்கிய நரம்புகள் தூண்டப்பட்டு அவ்விஷயத்திற்கு எதிரான செயல்களை செய்ய மூளையில் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. செய்திகளை சுமந்து செல்லும் மூளை நரம்பு மண்டல வேதியல் கூறுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு நம்மை அவ்விஷயத்தினை எதிர்க்கச் சொல்லியோ அல்லது தப்பிப்பதற்கோ ஆணைகள் பிறக்கின்றன. இதை தடுப்பதற்கு அல்லது எதிர்த்தல், ஓடிவிடுதல் ஆகிய நிலைகள் மாறி அமைதி ஏற்படுவதற்கு சம்பவம் நடக்கும் இடத்திலேயே மனோதத்துவ நிபுணர்கள் கூறும் வழிகள்.

மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள்.

மனம் மற்றும் உடலை அமைதியுறச் செய்யுங்கள்.

கேளுங்கள், சாந்தமாக மனதை இருக்கச் சொல்லி.

நாம் முன்பு அமைதியுடன் இருந்த நேரங்களை நினைவாற்றலில் கொண்டுவரவும்.

அமைதியான எண்ண அலைகள் மனதில் ஏற்படுவதினால் உண்டாகும் வித்தியாசத்தை உணருங்கள்.

மன உளைச்சல் நம்மை மீறும்போது, மூன்று அல்லது ஐந்து முறை ஆழமாக மூச்சு விடுங்கள். இப்படிச் செய்வதால் நமக்கு இரு நன்மைகள் விளைகின்றன. முதலாவதாக படபடப்பான நிலைகளில் சிறிது நேரம் மூச்சுவிடுவதற்காக எடுத்துக் கொள்வதால் அந்த கால அவகாசமே நமக்கு படபடப்பு குறைய வழி வகுக்கிறது. இரண்டாவதாக Neo Cortex என்ற சிந்தனா சக்தியை உடைய மூளைபாகமானது, வசப்படவும், அதிக பிராண வாயு கிடைப்பதன் பயனாக நல்லுணர்வை வெளிப்படத்தும் dopamine மற்றும் Serotonin என்ற வேதியல் செயல் கூறுகளை அனுப்புகின்றது. இதன் மூலமாக நம்முடைய தீர்மானங்கள் மிக்கவாறும் சரியாக அமைவதால் பின்நாளில் அதிகம் வருந்தும் நிலை ஏற்படுவதில்லை.

————————————————————————

Leave a Reply

Your email address will not be published.