வெங்காயம்!

images (83)

பார்க்கத்தான் வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னுமே இருக்காது கடைசியிலும் ஒன்று இருக்காது. ஆனால் இதில் எத்தனை மருத்துவங்கள் அடங்கியுள்ளது.  சின்ன வெங்காயம் தான் நாங்கள் குறிப்பிடுவது.

 

1) கொஞ்சம் வெங்காயத்தைத் தோலை உரித்து அதனுடன் கொஞ்சம் வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பமும் சரியாகிவிடும்.

2) காதில் வலி குறைய கொஞ்சம் வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.

3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4) வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5) வெங்காயத்தின் வாசனையே சிலருக்கு  தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு குணடமடையும்.

6) சிலந்தி போன்ற கட்டிகள் உடலில் ஏற்பட்டால் வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7) தீராத இருமலுக்கு வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8) பல்லில் வலி குறைய வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9) முலம் மற்றும் மூலச்சூட்டால் அவதியுற்றால் வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.

10) வெங்காயத்தை வேகவைத்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் அதிகரிக்கும்.

11) ஆண்மை அதிகரிக்க வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை     பெருகும்.

12) உடல் நடுக்கம் மற்றும் நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13) உடலில் ஏற்படும் பெரும்படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.

14) மயக்கம் மற்றும் திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15) பேதி மற்றும் வயிற்றுப்போக்கு வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், பேதி நிற்கும்.

16) தூக்கம் வராமல் தவித்தால் வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17) மேகநோய் மற்றும் வெண்மேக நோய் நீங்க பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18) மேகநோய் மற்றும் வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.

19) கொழுப்பை குறைக்க மற்றும் உடல்பருமன் குறைக்க வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20) நல்ல உறக்கத்திற்கு பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21) அஜீரணம் ஏற்பட்டால் வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.