நுரையீரலை பாதுகாக்க பத்து வழிகள்

images (82)

நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரல் தான் சுவாசிக்கின்றது.  காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்து அதை உடலில் உள்ள பாகங்களுக்கு இரத்தத்தின் வழியாக அனுப்புகின்றது. சராசரியாக நிமிடத்திற்கு 72 தடவைக்கும் மேல் மனிதன் சுவாசிக்கின்றான் எனில் 24 மணிநேரத்தில் 21 ஆயிரத்திற்கும் மேல் சுருங்கி விரிந்து சுவாசிக்கின்றது.

இந்த நுரையீரலில் உள்ள காற்றறைகளில் அதிகமாக அறைகள் உள்ளது.  அதல் காற்று நிரப்பப்படுகின்றது.  ஆரோக்கியமான நுரையீரல் எந்த விதப்பாதிப்பும் இல்லாமல் தினமும் செயல்படுகின்றது.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி காரணமாக நிறைய பிரச்சினைகள் நுரையீரலில் ஏற்படும் போது காற்று  சென்று வருவதில் தடை ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு நுரையீரலை பாதிப்படைய செய்யும் விசயங்கள் மற்றும் அதில் இருந்து நுரையீரலை பாதுகாப்பது போன்ற வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புகைப்பிடித்தல்

நுரையீரல் பாதிப்பு அடைவதே மாசற்ற காற்றினால் தான். ஒரு மனிதன் புகைக்கவே வேண்டாம் சாதரணமாக தினமும் மும்பை போன்ற பெரு நகரங்களில் வாழ்ந்தாலே போதும் அவனுக்கு சில மாதங்களில் சுவாசப்பிரச்சினைகள் வந்துவிடும். ஆனால் வாழ்நாள் முழுக்க புகைபிடித்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தளவுக்கு பாதிப்படைவார்கள். ஒரு முறை புகைபிடிப்பதால் நுரையீரல் உள்ளே 4000 க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் செல்கின்றன.

வளிமண்டல மாசுபடுதல் (காற்று மாசடைதல்)

எந்நேரமும் புகை வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் ஆலைகளுக்கு அருகிலோ அல்லது பஞ்சு ஆலைகளுக்கு அருகிலோ வசித்து வந்தால் அவர்களுக்கு எளிதில் சுவாசக்கோளாறுகள் வந்துவிடும்.  பெரிய நகரங்களில் வாகனப்புகைகளுக்கு நடுவே வாழும் வாழ்க்கையில் எளிதில் நுரையீரல் பாதிப்படைந்து விடுகின்றது. மும்பையில் ஒருநாள் வாழும் வாழ்க்கை இரண்டு சிகரெட் குடிப்பதற்கு சமமாம். இது போன்ற சமயங்களில் கர்ச்சீப் அல்லது மெல்லிய துணிகளை மூக்கில் கட்டிக்கொள்வது தான் சிறந்தது.

செல்லப்பிராணிகள் 

எல்லார் வீட்டிலும் ஒரு செல்லப்பிராணிகள் இருக்கும் (குழந்தையின் டெடி பியரும் தான்). அதன் தோல்களில் சிறு சிறு சாறுண்ணி பூச்சுகள் இருக்கும்.  இது பிராணிகளை தூக்கி கொஞ்சும் போது தானாகவே மூக்கினுள் நுழைந்து நுரையீரலை அடைகின்றது.  அது சுவாசக் கோளாறைத் தருகின்றது. செல்லப்பிராணிகளை வாரத்திற்கு ஒரு நாள் நன்றாக குளிக்க வைத்து அவைகளின் உறைவிடத்தை சுத்தம் செய்து வைக்கவும்.

உடற்பயிற்சி மற்றும் சுவாசப்பயிற்சிகள்

தினமும் உடற்பயிற்சி செய்வதால் அதிக அளவு சுவாசப்பயிற்சி கிடைக்கின்றது.  இது சுவாசக்கோளாறை சரிசெய்கின்றது மூச்சுக் கோளாறினை சரிசெய்கின்றது.  மூச்சுக்  குழாய்களை சரிசெய்து பெரிதாக்குகின்றது.  சுவாசப்பயிற்சிகள் தினமும் காலையில் செய்வதால் சுவாசப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுகின்றது.

நுரையீரல் உணவு முறைகள்

நுரையீரலை பலப்படுத்தும் உணவுகளான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை உட்கொள்வது நல்லது. விட்டமின் சி நிறைந்த நெல்லிக்கனிகளை சாப்பிடுவது நல்லது. காலிபிளவர் காய்கறியானது நுரையீரலைப் பாதுகாக்கின்றது.

சுவாசப்பிரச்சினைகள்

தீராத இருமல் நோய்கள், சளி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால் சுவாச நோய்க்கான அறிகுறியாகும். இதை சரிசெய்து கொள்ள வேண்டும்.  மீன் மாத்திரைகளில் நிறைய  சத்துக்கள் உள்ளது.  அதில் உள்ள மீன் எண்ணெய் நுரையீரலை தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாக்கின்றது.  நுரையீரலையும் பாதுகாக்கின்றது. நுரையீரலின் சுவாசத்திறனை அதிகரிக்கின்றது. நீண்ட மூச்சுக்கள் மற்றும் சுவாசப்பிரச்சினைகளை எதிர்கொள்ள நீண்ட மூச்சு மற்றும் சுவாசப்பயிற்சிகளை செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.