க‌ணி‌னி‌யி‌ல் ப‌ணிபு‌ரிபவ‌ர்கள் கவனிக்க

Different-reasons-can-cause

இப்போது எங்கும் கணினிமையமாகிவிட்டது கணினியில் வேலை என்றாலே நாள் முழுதும் கீபோர்டையும் மவுசையும் தட்டிக்கொண்டும் தடவிக்கொண்டும் தான் இருப்போம்.  இத்தகைய வேலையில் கண்வலி, தலைவலி, முதுகுவலி, கழுத்துவலி ஏன் விரலில் கூட வலி ஏற்பட்டுவிடுகின்றது.

இதற்கு என்னதான் மருந்து போட்டாலும் சரியானது போல் இருக்கும் அப்பறம் திரும்பவும் ஆரம்பித்துவிடும்.  காலப்போக்கில் இந்த வலி ஏற்படாது புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் வந்து போகும்.

இது போல் தினமும் வலி வந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 3 நிமிடம் எழுந்து நடக்கவேண்டும். கண்களை மூடி 1 நிமிடம் இருக்கவேண்டும்.  மணிக்கட்டினை சுற்றவேண்டும். கால்களை உதறவேண்டும். இடுப்பை முறுக்க வேண்டும்.  இவ்வாறு செய்தால் வலியெல்லாம் பறந்து போய் விடும்.

வாரத்திற்கு ஒரு முறை வெந்நீர் வைத்து எண்ணெய் தேய்த்து நன்றாக குளிக்க வேண்டும் கட்டிய இரத்தக்கட்டுக்கள் கரைந்து போகிவிடும். சரியாகிவிடும்.  கணினிதான் இயந்திரம் மனிதன் இல்லை. கணினிக்கு ஓய்வு தேவையில்லை மனிதனுக்கு ஓய்வு கண்டிப்பாக வேண்டும்…நலமுடன் வாழ்க….

Leave a Reply

Your email address will not be published.