பாகற்காய் ஒரு சிறந்த காய்கறி

pagarkai

பாகற்காய் சர்க்கரை நோயாளிக்கு ஒரு மிகச் சிறந்த நோய் நிவாரணி.  எவ்வித மறுப்புமின்றி அனைவரும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்.  இது எல்லோரும் அறிந்த விஷயம்தான்.  பாகற்காயில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது.  இது இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் குணமாகும்.  இதன் விதைகளைப் பொடி செய்து உணவோடு கலந்தும் சாப்பிடலாம்.  பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே.

பாகற்காயை அதன் கசப்பு சுவைக்காக பலர் விரும்புவதில்லை.  உடலுக்கு நல்லது தரும் அறுசுவைகளில் கசப்பும் ஒன்று அது பாகற்காயில் உள்ளது.  பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.  பாகற்காய் உடலுக்கு வெப்பத்தை தரும்.  பாகற்காயில் இரண்டு வகை உள்ளன.  1. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்று சொல்வர். 2. நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்று அழைப்பர்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடனும் சேர்த்து பாகற்காயை சமைப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.  நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காயை சாபிட்டால் மிகவும் பயனைத் தரும்.  காய்ச்சல், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை., இந்த அவஸ்தைகள் வரவேண்டாமே என்று நினைப்பவர்கள் எல்லோருமே   பாகற்காயை சாப்பிடலாம்.

பாகற்காய் நமது நாக்குக்கு தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.  பாகற்காயின் இலைகளில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.  அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.  பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப் போட்டால் சிரங்கு ஒழிந்து விடும்.  இதே போல் பாகற்சாறும் உடலுக்கு மிகவும் நல்லது.  ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு நோய்க்கும் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

Leave a Reply

Your email address will not be published.