எளிதாக தொப்பை குறைய வெந்நீர்

Blog-Announcing-Hot-Water

உட்கார்ந்த இடத்தில் வேலைசெய்வதாலும் அதிக அளவு கொழுப்பு உணவுகளை உட்கொள்வதாலும் தான் தொப்பை விழுகின்றது.   இந்த தொப்பை விழுந்தவர்கள் தங்களது தொப்பையை குறைக்க அனைத்து வழிகளையும் பின்பற்றுகின்றனர்.  ஆனால் எதிலும் வெற்றி கிடைக்காததால் மீண்டும் பழைய படி சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றனர்.

இது தான் உண்மை.  இந்த தொப்பையை குறைக்க நடைபயிற்சி ரொம்ப முக்கியம். அதே சமயம் அந்த நடைபயிற்சி காலை நேரத்தில் அமைவது நல்லது…. கெட்ட கொழுப்பினாலே வயிற்றில் அதிகமாக கொழுப்பு தேங்கிவிடுகின்றது.  காலையில் எழுந்தவுடன் சற்று மிதமான சூட்டில் தண்ணீர் ஒரு சொம்பு நிறைய குடித்துவிட்டு உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சியை கவனிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தாலே தானாக உடல் குறைய ஆரம்பிக்கும்.  இந்த வெந்நீர் ஆனது வேகமாக செயல்பட்டு கொழுப்பை கரைக்கும் வெறும் வயிற்றில் வெந்நீர் சென்று இரைப்பையை சுத்தம் செய்து விடுகின்றது.  பின்னர்  குடலை சுத்தம் செய்து மலச்சிக்கலை நீக்குகின்றது.

வியர்வை துளைகளில் உள்ள அடைப்பை நீக்கிவிட்டு வியர்வை வருவதை அதிகப்படுத்துகின்றது. இவ்வாறு அதிகப்படுத்தும் வியர்வை வெளியேறுவதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடுகின்றது. கொழுப்பும் கரைந்து விடுகின்றது.  நாளாக நாளாக சூட்டை அதிகப்படுத்த பழகிவிடவேண்டும்.  தொடங்கிய நாளில் இருந்து விடாமல் செய்து வந்தால் மூன்று மாதங்களில் இளைத்து விடுவீர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.