புதிய மெம்மரி கட்டமைப்பு கிராஸ்பார்

images (78)

கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தினை நாம் பார்த்திருப்போம் இந்த நினைவகங்கள் காந்த சக்தியைக்கொண்டு தரவுகளை மின்காந்த சமிக்ஞைகளாக சேமிக்கின்றது.  மேலும் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் மெம்மரி செய்யும் பகுதிகள் எப்படி வேலை செய்கின்றது தெரியுமா.

இந்த எலக்ட்ரானிக் மெம்மரி சிஸ்டம் ஆனது Logic Gates  கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.அந்த Logic Gates கள் ஒன்றிணைந்து Flip Flop என்று உருவாகின்றது.  ஒரு Flip-Flop ல் ஒரே ஓரு பிட் (bit) -யை மட்டும் தான் சேமிக்க முடியும். 1 Bit என்பது 0 அல்லது 1.  இந்த 0 என்பது மின் இல்லை.  1 என்பது மின் இருக்கின்றது என்று அர்த்தம்.

இவ்வாறு தான் 0 and 1 என்ற வார்த்தை உருவாகின்றது.  இப்படியே தொடர்ந்து

0 or 1      =>   1bit

4bit         =>   1Nibble

8bit         =>   1Byte

1024Byte =>  1KiloByte

1024KiloByte => 1MegaByte

1024MegaByte => 1GigaByte

1024GigaByte => 1TeraByte

1024TeraByte => 1PitaByte

இவ்வாறு உள்ளது….

மெம்மரியின் சர்க்கியூட் கட்டமைப்பு மாற்றுவதற்கு நிறைய வழிகள் தினமும் கண்டுபிடித்துவருகின்றார்கள்.  ஒரு காலத்தில்(2001)ஒரு கேமிராவில் உள்ள மெம்மரி கார்டானது வெறும் 32MegaBytes மட்டுமே கொண்டிருக்கும்.  தற்போது நிலவரப்படி(2015) 64Gb (65000Megabyte) சேமிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்குமேல் இன்னொரு கட்டமைப்பு உருவாகியுள்ளது அதற்குப் பெயர் குறுக்குச்சட்டம் (CrossBar).

இந்த கிராஸ்பாரின் நன்மைகள்

  • இதன் பரும அளவு மற்ற நினைவகங்களை விட சிறியது.(Space)
  • இது பயன்படுத்தும் மின் அளவு 20 மடங்கு குறைவு.(power)
  • இதன் நினைவாகக் கொள்ளளவு 200 மடங்கு அதிகமாக இருக்கும்.(capacity)
  • ஒரு வினாடிக்கு 140GB data வை இந்த Crossbar சிப்பில் எழுத முடியும்.  (Flash Memoryயில் ஒரு வினாடிக்கு 7GB)

உருவாக்கியவர்:  Wei Lu  , இவர் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

Google Glass போன்ற புதிய வகை சாதனங்களிலும் இந்த நினைவகம் பயன்படுத்தப்படுவதன் மூலம் இன்னும் பல வகை வசதிகளை பயணர்களுக்குக் கொடுக்க முடியும்.

Crossbar இதுவரை 100 காப்புரிமைகளுக்கு பதிவு செய்துள்ளது. அதில் 30 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இருபது ஊழியர்கள் இருக்கும் Crossbar நிறுவனம் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.  Kleiner Perkins Caufield & Byers, Artiman Ventures, and Northern Light Venture Capital முதலீடு நிறுவனங்கள் சேர்ந்து $25 மில்லியன் முதலீடு செய்துள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published.