புதிய காதில் வைக்கப்படும் வெப்பமானி

images (77)

தெர்மாமீட்டர் எல்லாரும் பார்த்திருப்போம் மருத்தவரிடம் காய்ச்சல் என்று சென்றால் உடனே அவர் நம் நாக்குக்கு அடியில் தெர்மா மீட்டரை வைத்துவிடுவார் தெர்மா மீட்டர் நமது உடல் வெப்பநிலையைக் காட்டும். பின்னர் டாக்டர் சோதனை செய்துவிட்டு உதறிவிட்டு தண்ணீரில் வைத்துவிடுவார்.

பின்னர் அடுத்த நோயாளி வந்த உடன் இதனையே தொடர்வார். இது சுகாதாரமற்றது மேலும் பாதரசத்தை பயன்படுத்துவதால் அது உடலுக்கு நச்சாகிவிடுகின்றது.  அதனால் மருத்துவ உலகில் தெர்மா மீட்டர் புதியதாக வந்துள்ளது.  அந்த தெர்மாமீட்டர் காதில் வைத்து உடலின் வெப்பநிலையை உணரப்பயன்படுகின்றது.

ear-thermometer-1a

அந்த வெப்பமானியில் பாதரசம் இருக்காது.  அதே சமயம் அதை நாக்குக்கடியில் வைக்கவேண்டிய தேவையில்லை. மனிதனின் காதுகளில் உடலின் வெப்பநிலை எவ்வளவு இருக்கின்றதோ அதைத்தான் காதும் கொண்டிருக்கும். அதனால் தான் காதுகளில் பனி உள்ளே வராமல் இருக்க காதை அடைத்துக் கொள்கின்றோம்.

இதன்படி காய்ச்சல் நேரத்தில் காதில் வெப்பம் அதிகரிக்கின்றது.   இது நாக்கில் வைக்கப்படும் தெர்மாமீட்டர்களை விட அதிதுல்லியமாக வெப்பத்தை காட்டக் கூடியது.   இதனால் மருத்துவ உலகில் இப்போது காது தெர்மாமீ்ட்டர்கள் பரவலாக பயன்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.