சரிவிகித உணவு-பாடிபில்டிங் உணவுகள்

new-food-pyramid-2012

உணவு முக்கோணம் என்பது என்னவென்று நமக்கு தெரியுமா…இது மனிதர்கள் உண்ணக்கூடிய உணவினை அதன் விட்டமின்களோடு குறிப்பிடுவது.  மிகவும் சக்திவாய்ந்த உணவுகள் எது. மற்றும் அந்த உணவினை உண்பதால் என்ன சக்திகள் கிடைக்கும் என்பது தான் இந்த Food Pyramid. உணவுகோபுரத்தினை அரசாகங்கமே அங்கீகரிக்கும்.

அதன்படி முழு தானியம், காய்கறி, பழங்கள், மாமிசம், பால் இவை அனைத்தும் தினந்தோறும் உட்கொள்ளவேண்டும். அதே சமயம் இது சரிவிகிதமாகும்.

மேலும் ஒரே ஒரு பீசாவை சாப்பிட்டால் மேற்கண்ட அனைத்து உணவுகளும் சரிவிகிதமாகிவிடுமாம் இது சிலபேரின் கூற்று.  இதனால் தான் மேல் நாடுகளில் தினந்தோறும் பால் மற்றும் பீசா இரண்டையும் தொடர்ந்து சாப்பிடுவார்கள்.

கண்டிப்பாக ஒரு மனிதன் உணவு உண்கின்றான் என்றால்  அதை நன்றாக கவனித்து ஒரு உணவு என்பது தாவரத்தில் இருந்து வந்திருக்கவேண்டும் (பழங்கள், காய்கள், கீரைகள், பூக்கள்) இல்லையெனில் ஒரு விலங்கின் தசையாக இருக்கவேண்டும் (அசைவம், மீன், மாமிசம்)…ஆனால் இதைத்தவிர மற்ற எல்லாமே வேதிப்பொருட்கள் தான்.(ஐஸ்கிரீம், பீட்சா, ஜூஸ், கூல்டிரிங்க்ஸ், மதுபானம்) .

கண்டிப்பாக நாம் சாப்பிடும் உணவு விட்டமின் அல்லது மினரலைத் தரவேண்டும்.  இதில் ஒன்று கூட தரவில்லையென்றால் அது உணவு கிடையாது.

 

சரிவிகித உணவு என்பது:

உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்ப் மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். மனித உடல் அமைப்புபடி காலரிகளில் 35% மேல் புரதத்தில் இருந்து வருவது ஆபத்தானது. ஆக புரத விகிதம் சுமார் 20 முதல் 25% இருக்கலாம். பாடிபில்டிங் மாதிரி பயிற்சிகள் செய்பவர்கள், கடும் உடல் உழைப்பாளிகளுக்கு 30% வரை செல்லலாம் (அதுவே அனாவசியம்)

கொழுப்புக்கான அரசு பரிந்துரை மினிமம் 30%. ஆனால் முன்னோர் உணவில் காலரிகளில் பெரும்பான்மை கொழுப்பில் இருந்து வரவேண்டும். கார்ப் 10% அல்லது அதற்கும் குறைவாக மட்டுபடுத்தபடவேண்டும். மெய்ன்டெனென்ஸ் டயட், தைரய்டு சிக்கல் இருப்பவர்கள், குழந்தைகள், கடும் உடல்பயிற்சி செய்வோர் ஆகியோர் கார்ப் சதவிகிதத்தை 20, 25% ஆக உட்கொள்லலாம். மீதம் இருப்போர் சுமார் 70% கொழுப்பு, 20% புரதம், 10% கார்ப் எனும் விகிதத்தில் உணவு உட்கொள்ளலாம்.
ஆக நம் உணவில் பெரும்பான்மை காலரி கொழுப்பில் இருந்து வருகிறது எண்ணிக்கையில் நம் உணவில் பெரும்பகுதி புல்லுணவு மாமிசம், முட்டை, நட்ஸ் ஆகியவற்றில் இருந்து வருவது அவசியம் ஆகிறது. இவையே நம் புரத தேவையையும் தீர்க்கும். 10% கார்ப் விதியை பூர்த்தி செய்ய காய்கறி, பழங்களை உட்கொள்ள்லாஅம். 1.5 கிலோ செலரியில் 200 காலரி மட்டுமே என்பதால் 10% காலரி தேவையை பூர்த்தி செய்ய ஏராளமான காய்கறி, கீரையை உட்கொள்வது அவசியம் ஆகிறது.

ஆக சரிவிகித உணவு என்பது:

போதுமான விகிதத்தில் கொழுப்பு, புரதம், கார்பை அளிப்பது.

உடலுக்கு தேவையான அனைத்து மூல சத்துக்கள் (வைட்டமின், மினரல், புரதம், கொழுப்பு, ஆண்டிஆக்சிடன்டுகள், பிலேவனாய்டுகள்) அளிப்பது

உடல் இயங்க தேவையான ஆற்றல், செயல்பாடுகளுக்கு தேவையான எனெர்ஜி மற்றும் ஊட்டத்தை அளிப்பது.

இதுவே சரிவிகித உணவாகும்

Leave a Reply

Your email address will not be published.