ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள்.

Oranges

ஆரஞ்சின் பழச்சாறின் சத்துக்களையும் அதன் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொள்வோம்.

பித்தநீர் அதிகம் சுரப்பதை தடுக்கிறது.  உடலுக்கு அவசியமான எல்லா சத்துக்களையும் தரும் பழச்சாறுகளையும் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் ” சி ” நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது.  ஆரஞ்சுப் பழம் சாப்பிடுபவர்களின் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.  உடலும் தளர்ச்சி அடையாமல் பளபளப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

சில பேருக்கு திடீரென்று குடல்புண் ஏற்படுகிறது.  தொண்டைப் புண்ணும் வருகிறது.

இதற்கு காரணம் என்ன?

பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் ஆகக் வகைகளை நிறைய உண்பதே .இதனால் உடல் வெப்பமாகி வாயுக்கள் அதிகமாகி புண்களை ஏற்படுத்துகிறது.  சில சமயங்களில் இது புற்று நோயாகக் கூட வரலாம்.  இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன.  இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து விடுபட இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.  150 மி.லி. ஆரஞ்சு பழச்சாறை பருகி வர வேண்டும்.  இரு முறைகள் கூட பருகலாம்.  ஆரஞ்சு பழத்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.  ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின்       ” சி ” யும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டால் பசி நன்றாக எடுக்கும்.  மலச்சிக்கலையும் நீக்கும்.  ஜீரணமாகாத உணவுகளை செரிமானம் ஆக்குகிறது.  இந்த ஆரஞ்சு பழச்சாறு. கழிவுகளை உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்குகிறது.  ஆரஞ்சு பழச்சாற்றை இரத்தம் உறி்ஞ்சிக்கொள்வதால் உடனடியாக உடலுக்கு உஷ்ணமும் சக்தியும் கிடைத்து விடுகிறது.

வியாதியஸ்தர்களுக்கும் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாற்றை கொடுக்கலாம்.  கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மி.லி. வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சுப்பழம் பல் சொத்தையை தடுக்கிறது.  பால் அருந்த பிடிக்காதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறு சாப்பிடலாம்.  இதனால் பாலில் கிடைக்கும் கால்சியம் சத்து போல் ஆரஞ்சிலும் கிடைக்கிறது.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது.  ஆரஞ்சுப்பழச் சாற்றில் சிறிது சுடுநீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காச நோய், தொண்டைப் புண் முதலியவை குணமாக 125 மி.லி. ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்.

ஆரஞ்சு பழச்சாறில் உள்ள சுண்ணாம்பு சத்து நெஞ்சு வலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய் போன்ற நோய்கள் குணப்படுத்துகிறது.

கருவுற்ற தாய்மார்களுக்கு ஆரஞ்சு பழம் கொடுத்து வந்தால் வாந்தி எடுப்பது நிற்கும்.

ஆரஞ்சு பழச்சாற்நை இரவு படுக்கைக்கு செல்லுமுன் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

ஆரஞ்சுப் பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள் அடங்கியுள்ளன.  ஏழு வகையான தாதுக்களும் உள்ளன.

எப்பொழுதும் இளமையாக வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் இன்றியமையாதது.

Leave a Reply

Your email address will not be published.