ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு சிலிண்டர் மானியம் ரத்து

download (90)

மத்திய அரசு இந்தியாவிற்கு மானிய விலையில் சிலிண்டர் கொடுத்து வருகின்றது.  ஆனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மட்டும் கொடுத்த மானியம் இப்போது நடுத்தர வயது குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் குடும்பத்தினர் மற்றும் பணக்காரர்களும் இந்த மானியத்தை பெறுகின்றனர்.  அதனால் மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது.  அதனைத் தடுக்க ஆண்டிற்கு பத்துலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலையில்  சிலிண்டர் கொடுப்பதை ரத்து செய்கின்றனர்.

நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் கேஸ் சிலிண்டர்களைப் பெற்று அதை அதிக விலைக்கு திரும்ப மக்களிடமே விற்று விடுகின்றனர்.  இதனால் மிக அதிகமாக சிலிண்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டு பதுக்கப்படுகின்றன.

இதனைத்தவிர்க்க வருமானவரித்துறைக்கு தணிக்கையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது. இதன்படி இதுவரை மானிய விலையில் சிலிண்டர் வாங்குபவர்கள் 10 லட்சத்திற்கும் குறைவாகத்தான் ஆண்டு வருமானம் பெறவேண்டும்.

அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிலிண்டர் மானியம் அரவே நீக்கப்படும்.  இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் மிச்சமாவதுடன் அந்த பணத்தை வீணடிக்காமல் மேலும்  ஏழைக்குழந்தைகளுக்கு செலவிடலாம் என்று வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.