காங்கிரஸ் பெண் உறுப்பினரின் முடி மர்ம நபர்களால் அறுப்பு

1447448140-0255
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவின் கட்சிகளுக்கு இடையே அடிக்கடி கட்சி சண்டைகள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.   வாக்கு வாதம், போராட்டம், அடி தடி, கொலை குற்றங்கள் ஆகியவை நடந்து விடுகின்றன.
இப்போது முதன் முறையாக பெண்ணையும் அவமானப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.  கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது அதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முன்னால் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமாரி போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அவர் நெய்யாற்றின் கரையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருக்கும் போது சில மர்ம நபர்கள் அவரைத்தாக்கி கீழேத் தள்ளி அவரின் முடியை அறுத்துள்ளனர்.  மேலும் அவரை அடித்து உதைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குமாரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குமாரி மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார்.   காவல் துறையில் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போரட்டம் நடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.