மாணவரை மனித அசிங்கத்தை அள்ளச் சொன்ன ஆசிரியை

2e194963-7d52-4cb5-97ee-4549bee725bb_S_secvpf

தமிழகத்தில் ஒரு ஆரம்பப்பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவனை மிரட்டி மனிதக்கழிவு அள்ளச்சொன்ன ஆசியரியை.

நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி.  இவரது மகன் சசிதரன் அவன் அங்குள்ள ஒரு ஆரம்பப்பள்ளி ஒன்றில் 2-ஆம் வகுப்பு படித்துவருகின்றோம்.

தீபாவளி விடுமுறையடுத்து பள்ளி வந்த மாணவன் வயிற்று உபாதை காரணமாக பள்ளி வகுப்பறையில் மலம் கழிந்து விட்டான்.  அந்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி (35) சசிதரனை மிரட்டி கையால் மலத்தை அள்ளச் சொல்லியிருக்கின்றார்.

வீட்டிற்கு சென்ற மாணவன் பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் அதிர்ச்சியாகி  பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து பள்ளியை மறித்து நின்று போராட்டம் நடத்தினர்.  மாணவன் முடியாத நிலையில் தான் மலத்தை வகுப்பறையில் கழித்துள்ளான் ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அவனை வற்புறுத்தி மலத்தை அள்ள சொல்லியிருக்கின்றீர்கள்.

இதனால் அவன் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான்.  உடனடியாக வகுப்பறை ஆசிரியை இடமாற்றம் அல்லது நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.  தகவல் அறிந்த காவல் துறை  அதிகாரிகள் தொடர்ந்து வந்து சமாதனம் செய்ய முயன்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து வந்து அந்த ஆசிரியை அழைத்து சஸ்பெண்டு செய்து உத்தரிவிட்டனர்.  இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.