மரணதண்டனை கைதிகளை காவல் காக்க பயங்கரமான முதலைகள்

images (71)

இந்தோனேசியாவில் கடத்தல் தொழில் அதிகமாக நடந்து வருகின்றது அதில் கைது செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அவர்களை மரணதண்டனை நிறைவேற்றும் வரை கடுங்காவலில் வைத்திருப்பர்.

இவ்வாறு காவல் வைத்திருக்கும்  போது காவலாளிகளை ஏமாற்றியோ அல்லது ”கவனித்து” விட்டோ சிறையில் இருந்து தப்பித்து ஓடிவிடுகின்றனர். அதனால் போதை மருந்து தடுப்புக் குழுவின் தலைவரான பூடி வாசேசோ புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

அதன்படி மனிதர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கே முதலைகளை காவலுக்கு வைத்துவிடுவது என்று.  ஏனென்றால் ”முதலைகளுக்கு லஞ்சம் கொடுக்க முடியாது மேலும் முதலைகளை ஏமாற்றும் முடியாது”  என்பதால்.

இது பழைய படத்தில் வரும் ஐடியாவாக தெரிந்தாலும் நல்ல முயற்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.  அதற்காக உலகம் முழுவதிலும் பலமாக முதலைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர்.  பொதுவா அலிகேட்டர் வகை முதலைகளைத் தான் தேர்ந்தெடுப்பர். இது மனிதனை முழுமையாக சாப்பிடக்கூடியது.

 

 

Leave a Reply

Your email address will not be published.