பெண்ணை பலாத்காரம் செய்த பூங்கா காவலர்கள் கைது

images (70)

பெங்களுரில் பூங்காவை காவல் காக்கும் பணியில் உள்ள காவலர்களே பெண்ணை பலாத்காரம் செய்ததை அடுத்து அவர்களை கைது செய்தனர்.

கர்நாடகத்தில் உள்ள துமகூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெங்களுரில் உள்ள கப்பன் டென்னிஸ் கிளப்பில் சேர வந்துள்ளார். நேரம் அதிகமாகி விட்டதால் அங்கேயே தங்கி மீதமுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க முடிவெடுத்துள்ளார்.

பேருந்து நிலையம் செல்ல அந்தப்பூங்காவின் காவலாளிகளிடம் உதவி கேட்டுள்ளார்.  ஆனால் அவர்கள் தவறான முகவரியைக் கொடுத்து தனிமையாக அழைத்துச்சென்று இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அந்தப்பெண் மயக்கம் தெளிந்து தனியாக நடந்துவந்து ரோட்டோரத்தில் அமர்ந்திருக்கின்றார்.  அதை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலிஸ் பார்த்து கேட்கையில் அவர் நடந்ததைக் கூறியுள்ளார்.

புகார் அளித்ததின் பேரில் அந்தப் பூங்கா காவலாளிகளை கைது செய்தனர்.  காவலாளிகளே இப்படி நடந்ததால் அங்கு மகளிர் அமைப்பு எதிர்த்து போராட்டம் செய்கின்றனர்.

கைதான இரு காவலர்களும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.   இருவரும் தற்போது தான் காவலர்களாக இணைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.