இதயத்திற்கு எதிரியே எண்ணெய்தான்

edible oil

இதயத்திற்கு பகைவன் யார் என்றால் அது எண்ணெய்தான்.  எண்ணெயின் உபயோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்., கூடுமான அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.. இப்படி செய்தால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள் டாக்டர்கள்.

ஆனால் எண்ணெயே இல்லாமல் எப்படி சமைப்பது என்று தாய்மார்கள் நம்மை கேள்வி எழுப்புவார்கள்.  அதற்கு பிமல் சார்ஜர் என்ற மருத்துவர் ஒரு சொட்டு எண்ணெய் கூட உபயோகப்படுத்தாமல் சமையல் செய்து சென்னையில் செய்து காண்பித்தார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல.  தற்போது குறிப்பாக நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை.

குளிர் பானங்கள், பாஸ்புட் இவைகளைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்.  இத்தகைய காரணங்களால் சிறு வயதிலேயே எடை அதிகரிக்கிறது.  சர்க்கரைவியாதி, உயர்இரத்த அழுத்த நோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணெய்தான் மூல காரணமாக விளங்குகிறது.  அசைவ உணவுகளை எண்ணெய் ஊற்றி அதிக நேரம் வறுத்து, உண்பதால் அதிக எண்ணெய் உடலில் சேர்கிறது.

இதய நோய் உள்ளவர்கள்  இரத்த நாளத்தில் 10 அடைப்புகள் இருப்பவர்கள்                                              பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள். இவர்கள் எண்ணெய் இல்லாது சமையல் செய்து சாப்பிட்டால்

இதய நோய் வராது,    இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது. அறுவை சிகிச்சை தேவையில்லை. என்று இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த டாக்டா் பிமல் சார்ஜல் கூறுகிறார்.

அவர் எண்ணெய் இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார். நான்ஸ்டிக் பாத்திரத்தை உபயோகப்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணெய்யை கூட உபயோகப்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார்.  அதை எல்லோரும் ருசித்து சாப்பிட்டனர்.  அதே போல் கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக் கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெல், டால்டா எதுவும் பயன்படுத்தாமல் அருமையான அல்வா செய்து காண்பித்தார்.

அதைப்போலவே சாம்பார் சாதம், சாம்பார். உருளைக் கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உட்பட பல உணவு வகைகளை செய்து காண்பித்தார். பயிற்சிக்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்கள் டாக்டரின் சமையலை சாப்பிட்டு சுவைத்தனர்.  சாப்பிட்டவர்கள் எண்ணெயை பயன்படுத்தி சமைத்தது போன்றே நல்ல ருசியாக இருந்தது என்று தெரிவித்தனர்.

எண்ணெய் இல்லாத உணவுகள் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகிறார் .நாங்கள் சா ஒல் என்ற விஞ்ஞானம் மற்றும். வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம்.  இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதய நோய் வந்தவர்களும் அதிலிருந்து விடுபட்டு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதும் எங்கள் குறிக்கோள் ஆகும் .எண்ணெய் தான் இதய நோய்க்கு மூல காரணம்

எல்லா சமையலும் எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியும் என்று நாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொறியல்,கூட்டு, குழம்பு உட்பட 155 வகைகள் செய்து காட்டி உள்ளோம்.  ”எண்ணெய் இல்லா தென் இந்திய சமையல்” என்று ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன்.  இரத்த அறுவை சிகிச்சையில்  இருந்து காப்பாற்றி உள்ளேன்,  இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டவர்கள், இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் இதில் அடங்கியுள்ளார்கள். அவர்கள் எங்களுடைய இருதய திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உண்ணும் உணவில் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது.   எவ்வளவு கலோரி                                    உடம்புக்கு ஏற்படும் பிரச்சினைகள்   வருகின்ற நோயாளிகளின் வேலை என்ன?                                          என்பது பற்றி விவரமாக கேட்டு அறிந்து கொள்வோம்.

பின்னர் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்.  எண்ணெய் இல்லாத சமையல் செய்து காண்பிக்கப்படும்.   தினந்தோறும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதற்கு ஆலோசனை சொல்லப்படுகிறது. மன அழுத்தம் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.                                     இது போன்ற வாழும் கலை பற்றி முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

பழங்கள் சாப்பிடலாம்.  அதில் எவ்வித தீங்கும் இல்லை.  பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணெய் எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

பயிற்சி முகாமில் நாங்கள் கற்றுக் கொடுத்ததை அவர்கள் தங்களது வாழ்க்கை முறையிலும் கடைபிடிக்க வேண்டும்.  பயிற்சிக்குஅதிகம் பேர் வருகின்றார்கள். இருதய நோய் இன்றி நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்..  ஏனென்றால் அறுவை சிகிச்சையை விட இவற்றை கடைப்பிடிப்பது எளிதானது என்பதால்.

இரத்த நாளத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு அடைப்புகள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். எண்ணெய் இல்லாமல் சாப்பிடுவதே முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.