தீபாவளியன்று 372 கோடிக்கு மது விற்பனை

bar

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுஒழிப்பு போராட்டம்  ” கடையை மூடு” என்று போராட்டம் நடத்தினாலும் மதுபானப்பிரியர்கள் தங்களது மதுபாட்டில்களை என்றும் விடுவதில்லை தீபாவளியன்று மட்டும் 370 கோடிக்கு மேல் மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தினமும் டாஸ்மாக் ஆல் தமிழ்நாட்டிற்கு 70 கோடி வருமானம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 90 கோடி முதல் 100 கோடி வரை வருமானம்.  ஆனால் நேற்று முன்தினம் தீபாவளியன்று மட்டும் கிட்டத்தட்ட 370 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தியேட்டர்களில் டிக்கட் வாங்க நிற்கும் கூட்டம் போல் டாஸ்மாக்கில் வரிசையில் நிற்கின்றார்கள். இந்த நிலை நீடிப்பதால் டாஸ்மாக்குக்கு எந்த அரசு வந்தாலும் தடை விதிக்காது.  தமிழ்நாட்டின் வருமானம் இதை நம்பித்தான் உள்ளது என்ற நிலைமை ஏற்படும் போலிருக்கின்றது.  ஒரு வேளை டாஸ்மாக்-யும் மூடிவிட்டாலும் குடிமகன்கள் எங்காவது சென்று கள்ளச்சாரயம் போல் கள்ள மதுவை குடிப்பார்கள்.

மது வீட்டுக்கு (கேடு) நாட்டுக்கு (?)

Leave a Reply

Your email address will not be published.