வரதட்சனைக்கொடுமையால் சிங்கப்பூரில் தமிழ்ப்பெண் தற்கொலை

0a77e3ee088dabe574020fed8db5f2d9

வரதட்சினைக் கொடுமை தாங்க முடியாத திருமணமான இளம்பெண் நேற்று 15 வது மாடியில் இருந்து சிங்கப்பூரில் தற்கொலை செய்து கொண்டார்.

திருவல்லிக்கேணியில் சுங்குவார் சந்து பகுதியைச்சேர்ந்த தீபிகா.  இவர் 2014 ஆம் ஆண்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கின்றார்.  அப்போது சென்னையைச்சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்ற வாலிபருக்கும் இவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஜெயப்பிரகாஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வருவதால் தீபிகாவையும் கூட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றார். அங்கு தீபிகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தீபிகா திருமணமான நாளில் இருந்து வரதட்சனைக்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.  தினமும் வரதட்சினை கேட்டு மணமகனின் பெற்றோர் கொடுமைபடுத்தியுள்ளனர்.

திருமண நிச்சயிக்கப்படுகையில் 100 சவரன் நகை வேண்டும் என்று கேட்டுள்ளனர். பெண் வீட்டார்கள் 40 சவரன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் மற்றும் வீட்டுப்பொருட்கள் வாங்கி வரதட்சனையாக கொடுத்துள்ளனர்.

மேலும் தீபிகாவுக்கு சிங்கப்பூரில் பிரசவம் நடக்கும் போது மேலும் 15 லட்சம் செலவானது இதையும் பெண் வீட்டார் தரவேண்டும் என்று கொடுமை நடத்தியுள்ளனர்.  இதனால் மனமுடைந்த தீபிகா தற்கொலை செய்து கொண்டார்.  ஆனால் தற்கொலையின் போது தன் சகோதரிக்கு செய்தி அனுப்பியிருக்கின்றார்.

“எனது சாவு எனது கணவருக்கும், அவரது பெற்றோருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என எனது கணவரிடம் கேளுங்கள். என் சடலத்தை அப்பாவின் செலவில் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வாருங்கள். எனது மகள் ஜெயப்பிரகாஷிடம் வளர வேண்டாம். குழந்தையை சென்னை கொண்டு வந்து வளர்த்து ஆளாக்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தீபிகாவின் பெற்றோர் சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் மேலும் தீபிகாவின் கணவர் மீதும் பெற்றோர் மீதும் வழக்கு போட வேண்டும் என்று புகாரளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.