மீண்டும் மேகி இந்தியாவில் கால் பதிக்குது

maggi-noodles

 மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு விற்பனையில் இம்மாத இறுதிக்குள் வருகின்றது.
நெஸ்ட்லே நிறுவனத்தின் படைப்பான மேகி நூடுல்ஸின் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அதிகமாக ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்று அதன் தயாரிப்பை இந்தியாவில் விற்க தடை விதித்தனர்.  மேலும் அதன்மீதான உணவுக்கட்டுப்பாட்டு வழக்குகள் தொடரப்பட்டன.  இப்போது பல ஆய்வுக்குட்பட்டு அதன் தயாரிப்புகள் மீண்டும் இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது.  மேலும் கர்நாடகம், பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்டன.  தமிழ்நாட்டில் கூட இம்மாத இறுதிக்குள் வந்துவிடும். என்று அதன் ஏஜன்ட்கள் தெரிவித்துள்ளனர்.
என்னதான் மேகி நூடுல்ஸ்-மீதான வழக்கு இல்லையென்றாலும்.  மக்கள் மனதில் மீண்டும் மேகியின் மேல் நம்பிக்கை வளர சில காலங்கள் ஆகும்.  அதுவரை மேகி நூடுல்ஸ் விற்பனையில் கொஞ்சம் கணிசமாகத்தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.