வைகோவின் தாயார் மாரியம்மாள் 96 வயதில் காலம் ஆனார்.

vaiko-mother
திரு வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார் அவரது வயது 96.
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். அவரை அவ்வப்போது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தார்கள்.   நேற்று பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரியம்மாள் அவர்களை தீவிரச் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சையளித்து வந்துள்ளனர்.  இன்று காலை (வெள்ளி 06-11-2015) அன்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
வைகோவிற்கு ஒரு சகோதரரும் மற்றும் மூன்று சகோதரிகளும் உள்ளனர்.  மாரியம்மாள் அவர்கள் வைகோவின் கட்சிப்பணிகளுக்கு மிகுந்த ஆதாரமாக இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் நடந்த மது ஓழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
மதிமுக கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சித்தலைவர்கள் மாாியம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வைகோவுக்கு ஆறுதல் கூறினர்

Leave a Reply

Your email address will not be published.