தன் வீ்ட்டில் கொள்ளையடிக்க தானே நண்பனுக்கு உதவிய மனைவி

images (64)

தன் சொந்த வீட்டில் கொள்ளையடிக்க நண்பருக்கு திட்டம் போட்டுக் கொடுத்து உதவிய மனைவி கைது.

பேங்களுரில் ஜேபி நகரைச் சேர்ந்தவர் ராம்சந்திரன். மனைவி ஸ்ருதி மற்றும் மனைவியின் நண்பர் குமார். குமார் அருகில் உள்ள தாசரஹள்ளியைச் சேர்ந்த குமார்.

ராம்சந்திரா தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் சுமார் 1.30 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. அது எங்கே எப்படி திருடுப் போனது என்ற போலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது குமார் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.  மேலும் ஸ்ருதி தான் என்னை வரச்சொன்னார் கொள்ளையடிக்கச் சொன்னார். என் அதிரடியாக கூறினார். இதனால் ஸ்ருதியையும் கைது செய்து போலிஸார் விசாரனை நடத்துகின்றனர்.

சொந்த வீட்டில் மனைவியே கொள்ளையடிக்க கொள்ளைக்காரனுக்கு திட்டம் வகுத்துக்கொடுத்தது மிகுந்த சர்ச்சையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.