கேரளாவில் நாய்வளர்க்கக் கூட இனிமேல் லைசென்ஸ் வாங்க வேண்டும்

download (80)

கேரளாவில் நாய்கள் வளர்க்க இனிமேல் அரசின் அனுமதி மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று கேரளத்தில் உயர்நீதிமன்றம் சட்டம் போட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நாய்கள் பெருகிவிட்டது.  மற்றும் இந்த நாய்களால் பொது மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றது. என்று கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.   அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாய் வளர்க்க இனிமேல் லைசென்ஸ் பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

கேரளாவில் அதிகமாக நாய்கள் உள்ளது. அதில் பெரும்பாலும் பெண் நாய்கள் தெருவோரத்தில் அதிகமாக வளர்கின்றது. இது  இரவு மற்றும் பகல் வேளைகளில் மக்களுக்கு பாதிப்பை தரும். மேலும் அவைகள் போடும் குட்டிகளால் மேலும் நாய்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். எனவே நாய்களின் எண்ணிக்கையை குறைக்க பெண் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தெருவில் சுற்றித் திரியும் ஆண் நாய்களை பிடித்து கூண்டில் அடைப்பது போன்றவைகள் செயல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அம்மாநில சட்டம் முடிவெடுத்துள்ளது.

வெறிநாய்களை பிடித்து ஊசி போட்டு கொன்றுவிடுவது என்று தெரிகின்றது. அதேபோல் வீட்டில் அரசின் அனுமதியில்லாமல் நாய் வளர்க்கக்கூடாது அதே சமயம் நாய் வளர்க்க அரசின் உரிமத்தை பெற்றிருக்கவேண்டும்.  வாரம் ஒருமுறை நாயை கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். என்று சட்டம் பிறப்பித்துள்ளது.

நாய்கள் ஜாக்கிரதை!

Leave a Reply

Your email address will not be published.