சிறுவனை காலால் உதைத்து அப்புறப்படுத்திய பெண் அமைச்சர்

images (62)

பண உதவிக்காக மண்டியிட்ட 14 வயதுச் சிறுவனை ம.பி கால்நடைத்துறை பெண் அமைச்சர்  காலால் உதைத்து தள்ளியுள்ளார்.  இது வீடியோவாக எடுக்கப்பட்டு சமுக வலைதளத்தில் பெரும் பரபரப்பைக் கொடுத்துள்ளது.

தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பண்ணாவிற்கு சென்ற ம.பி. கால்நடைத்துளை அமைச்சர் குசும் மெதலே பண்ணாவின் பேருந்து நிலையம் அருகே துப்புறவுப்பணியை துவக்கிவிட்டு காரை நோக்கி சென்றார்.  அப்போது அவரிடம் உதவிகேட்டு ஒரு பதினான்கு வயதுச்சிறுவன் மண்டியிட்டான்.

அமைச்சர் அவர்கள் என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியவில்லை சிறுவனை தனது கால்களால் இடறிவிட்டு சென்று காரில் ஏறிக்கொண்டார். மற்றம் அமைச்சரின் பாதுகாவலர்கள் அனைவரும் சிறுவனை அப்புறப்படுத்தினர்.

குறிப்ப- சிறுவன் ஒரு ருபாய் அமைச்சரிடம் பெற வேண்டும் என்பதற்காக மண்டியிட்டுள்ளான்.  அளனால் சிறுவன்  இவ்வாறு அவமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.  ஊடகங்கள் வழியாக வீடியோ காட்சியும் பரவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.