குப்பை அள்ளிய தாய்க்கு மரியாதை செலுத்திய தாய்லாந்து அழகி

thailand

தாய்லாந்து நாட்டில் நடந்த அழகிப்போட்டி ஒன்றில் வெற்றிபெற்று அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 வயது இளம்பெண் கனிதா மின்ட் பசாங்.

இவரின் குடும்பம் ஏழ்மைநிலையில் உள்ள குடும்பம் இவரது தாயார் குப்பை அள்ளும் பணியாளாராக உள்ளார்.  இவர் குப்பை அள்ளும் தொழில் இருந்து கொண்டுதான் மகளை வளர்த்துள்ளார். தன் தாயாருக்கு செய்யும் சிறந்த  மரியாதையாக அவர் அழகிப்பட்டத்தை வென்றவுடன் அங்கிருந்து கிளம்பி தாயார் வேலைசெய்யும இடத்திற்கு வந்து தாயின் காலில் விழுந்து மரியாதையை செலுத்தினார்.

அவர் கூறுகையில் ”நாங்கள் குப்பை அள்ளும் தொழில் செய்துதான் பிழைத்தோம் நாங்கள் வளருவதற்கும் படிப்பதற்கும் இந்த தொழிலில் வந்த பணம் தான் உதவியது.  நாங்கள் இதை கேவலமாக நினைக்கவில்லை. இதனால்தான் நாங்கள் இன்னமும் இதை விடவில்லை எங்கள் தாயார் குப்பை சேகரிக்க உதவியாக இருப்போம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.