தீயணைப்பு வீரரின் மரண வாக்கு மூலம்- வாட்ஸ் அப்பில் பரபரப்பு

whatsapp_video

வாட்ஸ் அப்பில் ஒரு தீயணைப்பு படை வீரரின் மரண வாக்கு மூலம் பரவி சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

திருவள்ளுர்ப்பகுதியில் பணியின்போது தீயணைப்பு வீரர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிர் இழந்துள்ளார். மேலும் அவர் தனது மரணத்திற்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடி தான் காரணம் என்று அவர் வாட்ஸ் அப் வீடியோவில் கூறிவிட்டு இறந்துள்ளார்.

இவரின் சொந்த ஊர் திருவண்ணாமலை அருகே உள்ள மணிகண்டம். அவர் திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நேற்று முன்னாள் மாற்றலாகி வந்தார். நேற்று முன்தினம் மாற்றலாகி வந்தவுடன் வேலைநேரத்தில் தீயணைப்பு நிலையத்தில் இரத்த வாந்தி எடுத்தார் உடனே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தி. மலையில் பணிபுரிந்தபோது விடுமுறை தராததால் அதிகாரிகளுடன்  பேச்சு ஏற்பட்டு விஷம் குடித்துள்ளார். பின்னர் வேலை மாற்றப்பட்டு திருவள்ளுர் வந்திருக்கின்றார். ஆனால் சரியாக வேலை செய்ய முடியாமல் இறந்து விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த மரணவாக்கு மூல வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால் மேலும் பதற்றம் ஏற்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.